இடுகைகள்

2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

FARZI: கள்ளப்பணம் பற்றிய நல்ல படம்

படம்
Raj & DK இயக்கத்தில் வெளிவந்த The family Man வெப் சீரிஸ் பற்றி ஏற்கனவே உயிர்மையில் எழுதியிருக்கிறேன். திரும்பிப் பார்ப்பதற்குள் Farzi, Guns and Gulaabs, Citadel Honey Bunny என ஏராளமான தொடர்களை எடுத்துவிட்டார்கள். இவற்றில் ஃபார்ஸி (Farzi) என்ற வெப் சீரிஸ் 2023 பிப்ரவரியிலேயே வந்துவிட்டது. அமேசான் பிரைமில் வந்த தொடர்களில் அதிகம் பார்வையாளர்களைக் கொண்ட தொடர் இதுதான். எனக்குத் தெரிந்து எல்லோருமே நல்ல ரேட்டிங்ஸைக் கொடுத்திருந்தார்கள். 2023க்கான Filmfare OTT award-ம் வாங்கியிருக்கிறது. ஆனாலும், மிக சமீபத்தில்தான் இந்த வெப் சீரிஸைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸில் இருக்கும் பல விசயங்கள் ஃபார்ஸி வெப் சீரிஸிலும் இருப்பதைப் பார்க்க முடிந்தது. Encounter, தேசபக்தி, பாகிஸ்தான் என எல்லாவற்றைப் பற்றியும் இரண்டு தொடர்களிலும் ஒரேமாதிரியான பார்வையைத்தான் முன்வைக்கிறார்கள். குறிப்பாக, தி ஃபேமிலி மேனில் வரும் மனோஜ் பாஜ்பாய் கதாபாத்திரத்திற்கும் ஃபார்ஸியில் வரும் விஜய் சேதுபதி கதாபாத்திரத்திற்கும் ஏகப் பொருத்தம். இரண்டு கதையிலும் வரும் முக்கிய கதாப்பாத்திரம் நாட்டுக்காக அல்...